புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 12 மே 2019 (17:15 IST)

அன்னையர் தினத்தில் இரும்புப்பெண்மணி இரோம் சர்மிளாவுக்கு இரட்டை குழந்தைகள்

மணிப்பூரின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுபவர் இரோம் சர்மிளா. மணிப்புஇரில் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை அரசு திரும்பப்பெறக் கோரி 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தார்.
 
இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தேஸ்மந்த் கொட்டின்கோ என்பவரை கொடைக்கானலில் இரோம்சர்மா திருமணம் செய்து கொண்டார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமான இரோம் சர்மா, இன்று அழகான இரட்டைக்குழந்தைகளை பெற்றெடுத்தார். இரோம் ஷர்மிளாவுக்கு குழந்தை பிறந்த தகவலை சமூக ஆர்வலர் திவ்யா பாரதி தனது முகநூலில் தெரிவித்ததுடன் தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் பதிவு செய்துள்ளார். 
 
சரியாக அன்னையர் தினத்தில் இரோம் சர்மா இரட்டைக்குழந்தைகளை பெற்றெடுத்தது அன்னையர் தினத்திற்கே சிறப்பானது என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.