புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 12 மே 2019 (15:44 IST)

5 ஆண்டுகளில் 49 வெளிநாட்டுப் பயணம் – செலவு எத்தனைக் கோடி தெரியுமா ?

மோடி மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் வெளிநாடு மற்றும் உள்நாடு பயணங்களின் செலவு எவ்வளவு என்பதை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து அதிகளவில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இது எதிர்க்கட்சிகளாலும் சமூக ஆர்வலர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து அவரும் அவரது அமைச்சரவையிலும் உள்ள அமைச்சர்களின் பயணச்செலவ்யு எவ்வளவு என்பது குறித்து மும்பையை சேர்ந்த ஆர்டிஐ செயற்பாட்டாளர் அனில் கல்கலி பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதையடுத்து அந்த விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் வெளிநாட்டு பயணங்களின் செலவாக ரூ.263 கோடி ரூபாய் எனவும் உள்நாட்டு பயணங்களுக்கு ரூ.48 கோடி ரூபாயும்  மேலும் இணையமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணச்செலவு 29 கோடி ரூபாய் எனவும் உள்நாட்டுப் பயணச்செலவு 53 கோடி ரூபாய் எனவும் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக மோடி, கேபினட் அமைச்சர்கள், இணையமைச்சர்களின் உள்நாட்டு, வெளிநாட்டு பயணங்களுக்காக  ரூ.393.58 கோடி செலவிட்டுள்ளது. இதுவரை 49 வெளிநாட்டுப் பயணங்களை கடந்த 5 ஆண்டில் மேற்கொண்டுள்ளார்.