திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (16:16 IST)

ஆர்எஸ்எஸ் விழாவில் ராகுல் காந்தி?

ஆர்எஸ்எஸ் அமைப்பு அடுத்த மாதம் நடத்தவிருக்கும் விழாவிற்கு ராகுல் காந்திக்கு அழைப்புவிடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் இந்த விழா நடக்க உள்ளது. இந்தியாவில் தற்போது நிலவும் அரசியல் குறித்தும் பொருளாதார சூழ்நிலை குறித்தும் இதில் விவாதம் நடத்தப்பட உள்ளது. 
 
இந்த விழாவில் பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது, அவர்களோடு சேர்த்து ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டவுள்ளதாம். ஆனால், ராகுல் காந்தி இந்த அழைப்பை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
சமீபத்தில் சில கூட்டங்களிலும், நிகழ்வுகளிலும் ராகுல் காந்தி ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆண்டு விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அப்படி அழைக்கப்பட்டால், ராகுல் காந்தி மரியாதை கருதி செல்ல வாய்ப்புள்ளது எனவும் செய்திகள் வெளியாகிறது.