பாஜக தலைவரை பொளேரென அறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. - வைரலாகும் வீடியோ

Cong
Last Modified திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (12:03 IST)
பொது இடத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பாஜக தலைவரை பொளேரென அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள தண்டா என்ற பகுதியில், சில நாட்களுக்கு முன்பு குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் அந்த குழந்தையின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமாங் சிங்கார் சிறுமியின் வீட்டிற்கு சென்றார். அப்போது உள்ளூர் பா.ஜ.க. தலைவர் பிரதீப் காடியா என்பவரும் நிதியுதவி வழங்க  சிறுமியின் வீட்டிற்கு வந்தார்.
 
அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ, பாஜக தலைவரை கன்னத்தில் அறைந்தார்.
 
உடனடியாக அங்கிருந்த போலீஸார் இருதரப்பையும் பிரித்துவிட்டனர். இதுகுறித்து பிரதீப் காடியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார்  எம்.எல்.ஏ. உமாங் சிங்கார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :