திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (07:29 IST)

கேரள வெள்ள பாதிப்புகளை இன்று நேரில் பார்வையிடுகிறார் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை  இன்று நேரில் பார்வையிட இருக்கிறார்.
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்தனர். லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதி இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து அனுப்பப்படுகிறது. 
இந்நிலையில் கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்றும், நாளையும் பார்வையிட இருக்கிறார். மேலும் மக்களுக்கு உதவிய மீனவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களையும் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார்.