செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (17:16 IST)

நாளை முதல் உள்நாட்டு விமானங்களும் ரத்து: அதிரடி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் மத்திய அரசும் நாடு முழுவதும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏற்கனவே சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வர்த்தக ரீதியில் இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகள் நாளை நள்ளிரவு முதல் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஏற்கனவே இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் நாளை இரவு 12 மணிக்குள் தரையிறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை இரவுக்கு பின் மறு அறிவிப்பு வரும் வரை உள்நாட்டு விமானங்களும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது