INI CET தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
INI CET தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது என்பதும், ஒரு சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின் படி INI CET தேர்வை ஒத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்ட மேற்படிப்புகாக நடத்தப்படும் தேர்வு INI CET. இந்த தேர்வு வரும் 16ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் 16ஆம் தேதி நடக்க இருந்த தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த தேர்வை குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒத்தி வையுங்கள் என உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் இந்த நேரத்தில் தேர்வு நடத்துவது உகந்தது அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.