இன்று முதல் மீண்டும் பஸ் போக்குவரது: கேரள அரசு அறிவிப்பு!

இன்று முதல் மீண்டும் பஸ் போக்குவரது: கேரள அரசு அறிவிப்பு!
siva| Last Updated: புதன், 9 ஜூன் 2021 (07:38 IST)
இன்று முதல் மீண்டும் பஸ் போக்குவரது: கேரள அரசு அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்த நிலையில் ஊரடங்கு மற்றும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து இன்று முதல் அங்கு பஸ் போக்குவரத்து தொடங்குவதாக கேரள போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றில் கூறியபோது தினசரி கொரோனா பாதிப்பு தற்போது கேரளாவில் 20 ஆயிரத்திற்கு குறைவாக உள்ளது என்றும் அதனால் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பஸ் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

முதல் கட்டமாக நீண்டதூர பஸ்கள் மட்டும் இயக்கப்படும் என்றும் படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படும் என்றும் நீண்ட தூர பயணத்திற்கு மட்டும் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

எனினும் கேரளாவில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் இன்னும் இயங்காது என்றும் அது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஜூன் 16ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தாலும் தற்போது பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழகத்திலும் விரைவில் பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :