1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2017 (17:00 IST)

இண்டிவுட் எக்ஸ்சலன்ஸ் விருதுகள்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை இண்டிவுட் திரைப்பட திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

 
விழாவில் தெலங்கானா மாநில சுற்றுலா துறை அமைச்சர் மற்றும் மாநில முதல்வர் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இந்த இண்டிவுட் திரைப்பட விழாவில் நோக்கம் உலகம் முழுவதிலும் இருந்து வர்த்தக பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள், காட்சியாளர்கள் மற்றும் திறமையுடவைர்கள் ஆகியவர்களை உள்ளே அழைப்பதற்காக என்று தெரிவிக்கப்பட்டது.
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்ந்த என்.ஆர்.ஐ. தொழிலதிபர் சோஹன் ராய் தலைமையிலான இண்டிவுட் திட்டம் 2000 இந்திய பில்லியனர்கள் மற்றும் நிறுவனங்களால் ஊக்குவிக்கப்பட்டது. இண்டிவுட் திரைப்பட திரைப்பட திருவிழாவின் ஒருபகுதியாக 2017ஆம் ஆண்டிற்கான இண்டிவுட் ஐடி சிறப்பு விருது வழங்கும் வழா நடைபெற்றது.
 
தொழில்முனைவோர், தொழில்நுட்பத்தில் புதுமை புகுத்திய நிறுவனத்தலைவர்கள், இணைய மேம்பாடு மற்றும் டிஜிட்டல் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஆகியற்றில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் மற்றும் தலைவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
 
10 பில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்தை 2000 இந்திய பெருநிறுவன மற்றும் பல மில்லியனர்கள் கூட்டமைப்பு தொடங்குவதற்கு திரைப்பட திருவிழாவின் ஒருபகுதியாக இண்டிவுட் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.