திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2017 (13:10 IST)

கர்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை; ஓடும் வேனிலிருந்து தப்பிக்க முயற்சித்து பலி

ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க ஓடும் வேனிலிருந்து குதித்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வந்தவர் உதே கலாவதி(32). இவர் பழைய துணிகளை விற்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. 7 மாத கர்ப்பிணியான இவர் கடந்த 2ஆம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். பேருந்தை தவறவிட்டதால் ஒரு வேனில் உதவி கேட்டு தனது குழந்தையுடன் பயணித்துள்ளார்.
 
வண்டியில் சென்று கொண்டிருந்தபோது வேனில் இருந்த டிரைவர் மற்றும் கிளினர் இருவரும் சேர்ந்து கலாவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கலாவதி ஓடும் வேனில் இருந்து குதித்துள்ளார். சம்பவ இடத்திற்கு கலாவதி உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் குழந்தையை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
 
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது காவல்துறையினர் வேன் டிரைவர் மற்றும் கிளினர் ஆகியோரை தேடி வருகின்றனர்.