1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 3 ஜூலை 2018 (15:48 IST)

கைலாஷ் யாத்திரைக்கு சென்ற 1500 பக்தர்கள் சிக்கி தவிப்பு; மீட்பு பணிகள் தீவிரம்

நேபாளத்தில் கைலாஷ் யாத்திரைக்கு சென்று சிக்கிய 1500 பக்தர்கலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 
இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். நேபாளத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
கைலாஷ் யாத்திரைக்கு சென்று திரும்பிய 1500 பக்தர்கள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்திய தூதரகம் அளித்த தகவலின்படி சிமிகோட் பகுதியில் 525 பக்தர்களும், ஹில்சாவில் 550 பக்தர்களும் சிக்கியுள்ளனர். 
 
நேபாளம் வழியாக யாத்திரை மேற்கொள்ளும் வழியை இந்திய தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. விமானங்கள் இயங்கும் சாத்தியமும் குறைவாக உள்ளது. மேலும் நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவி செய்யுமாறு வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.