தொடர்புடைய செய்திகள்
- இந்திய ரூபாய் மதிப்பு நன்றாக உள்ளது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்
- ஓடிடியில் கால்பதித்தது ராஜ் டிவி… ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்!
- வரலாறு காணாத உச்சம்.. ரூ.81 தொட்ட டாலருக்கு நிகரான மதிப்பு!
- இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: டாலர் மதிப்பு உச்சம்!
- 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 வருடம் சிறைத்தண்டனை: அரசு அறிவிப்பு!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத அளவில் கடும் வீழ்ச்சி அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வந்தது என்பதும் கடந்த மாதம் ரூபாய் மதிப்பு 80 ரூபாய்க்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்தது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த வாரம் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்து 81 ரூபாய்க்கும் அதிகமாக ஆனதை அடுத்து இன்று மேலும் வீழ்ச்சி அடைந்து 81.45 என டாலருக்கு நிகரான மதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவது ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் லாபத்தை தரும் என்றாலும், இறக்குமதியாளர்களுக்கு பெரும் நஷ்டத்தைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் 85 முதல் 90 ரூபாய் வரை இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
