1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2022 (09:01 IST)

ஓடிடியில் கால்பதித்தது ராஜ் டிவி… ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்!

தமிழின் தனியார் தொலைக்காட்சி வரலாற்றில் மிக முக்கியமான இடம்பிடித்தது ராஜ் டிவி.

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சன் டிவிக்கு இணையான நீண்ட பயணத்தைக் கொண்டது ராஜ் தொலைக்காட்சி. பல முக்கியமான தமிழ் கிளாசிக் படங்களை வாங்கி ஒளிபரப்பி பிரபலமானது. அதிலும் இந்தியன் படத்தின் ஒளிபரப்பின் போது சுமார் 4 மணிநேரத்துக்கும் மேல் விளம்பரங்களை திரையிட்டது அப்போது பரபரப்பாக பேசப்படட்டது.

ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் மற்ற தொலைக்காட்சிகளோடு போட்டி போட முடியாமல் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இப்போது இந்த தொலைக்காட்சி நிறுவனம் ஓடிடியில் கால் பதித்துள்ளது. நேற்று இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. சுமார் 1000 படங்களுக்கு மேல் கொண்டுள்ள இந்த ஓடிடி தளத்துக்கு ஒருநாளைக்கு ஒரு ரூபாய் எனும் விதத்தில் வாடிக்கையாளர் கட்டணம் விதிக்கப்படுகிறது.