தொடர்புடைய செய்திகள்
- சாலையின் ஓரத்தில் பாரத் சன்சார் நிகாம் லிமிடெட் கேபிள்..மக்கள் பாதிப்பு
- 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிடக் கோரி மணிப்பூர் முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- 150 கோடி ரூபாய்க்கு விற்பனையான கார்த்தியின் மூன்று படங்கள்!
- இந்த மாதம் சிலிண்டர் விலை ரூ.92 குறைவு! மக்கள் நிம்மதி பெருமூச்சு!
- வசூலில் 100 கோடி ரூபாயை நெருங்கும் சமுத்திரக்கனி இயக்கிய தெலுங்கு படம்!
இன்னும் ரூ.42000 கோடி ரூ.2000 நோட்டு புழக்கத்தில் உள்ளது: ரிசர்வ் வங்கி தகவல்..!
இந்தியாவில் இன்னும் 42000 கோடி 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது என்பதும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது
இந்த நிலையில் பொதுமக்கள் தங்களிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி தெரிவித்த ஒரு புள்ளி விவரத்தின் படி இதுவரை 3.14 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டு திரும்ப வந்துள்ளது என்றும் இன்னும் 42000 கோடி ரூ.2000 நோட்டு புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மீதம் இருக்கும் தொகையை பொதுமக்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் செப்டம்பர் 30ம் தேதிக்கு பின்னர் 2000 ரூபாய் நோட்டு செல்லாததாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
