1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (22:03 IST)

சாலையின் ஓரத்தில் பாரத் சன்சார் நிகாம் லிமிடெட் கேபிள்..மக்கள் பாதிப்பு

karur
கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் நஞ்சை புகழூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் நான்காவது வார்டு சிமெண்ட் சாலையில் பாரத் சன்சார் நிகாம் லிமிடெட் கேபிள் சாலையின் ஓரத்தில் கிடப்பதால் பலருக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
.

கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் நஞ்சை புகழூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் நான்காவது வார்டு சிமெண்ட் சாலையில் பாரத் சன்சார் நிகாம் லிமிடெட் கேபிள் சாலையின் ஓரத்தில் கிடக்கிறது.

இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் கால் தவறி கீழே விழும் சூழல் உள்ளது. இது சம்பந்தமாக பலமுறை பஞ்சாயத்து அலுவலகத்தில் எடுத்து கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாளை ஏதேனும் விபரீதமான சம்பவங்கள் நடைபெறும்பச்சத்தில் இதற்கு யார் பொறுப்பேற்பது. எனவே  இந்த கேபிள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.