1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 2 ஆகஸ்ட் 2023 (08:05 IST)

கானுன் புயல் எதிரொலி: 500-க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து..!

ஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் கானுன் என்ற புயல் உருவானதை அடுத்து இந்த புயல் கரையை கடந்துள்ளதால் ஜப்பான் நாட்டில் 500க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒகினாவால், அமாமி ஆகிய பகுதியில் புயல் கரையை கடந்து போகும் அப்போது மணிக்கு 198 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசியதாகவும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் புயல் கரையை கடக்கும் பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும் அதனால் தாழ்வான பகுதிகள் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறும்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கானுன் புயல் காரணமாக நேற்று முன்தினம் 264 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் நேற்று 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  புயல் காரணமாக இன்றும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva