வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (11:32 IST)

மிஸ்டு கால் கொடுத்தால் வீடு தேடி கேஸ் இணைப்பு! – இந்தியன் ஆயில் அறிவிப்பு!

குடியிருப்புகளில் கேஸ் இணைப்பை எளிமையாக விரைந்து வழங்க மிஸ்டு கால் திட்டத்தை இந்தியன் ஆயில் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் எரிவாயு கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பலரும் புதிய கேஸ் இணைப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதற்காக கேஸ் முகவர் அலுவலகங்கள் தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது,

இந்நிலையில் மிஸ்டு கால் கொடுத்தால் வீட்டிற்கே வந்து கேஸ் இணைப்பு தரும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 84549 55555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் புதிய இணைப்புகள் விரைவில் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மூத்த குடிமக்கள், கிராமங்களில் வசிப்போர் பயன்பெறுவர் என கூறப்பட்டுள்ளது.