தெருக்களில் வசிப்போருக்கும் ரேஷன் கார்டு! – கேரள அரசு நடவடிக்கை!
கேரளாவில் தெருக்களில் வசிப்போருக்கும், திருநங்கைகளும் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரளாவில் வாடகை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் தெருக்களில் வசிக்கும் வீடற்றவர்களுக்கும் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாடகை வீட்டில் உள்ளவர்கள் பிரமாண பத்திரத்தை ஆதாரமாக கொண்டு ரேஷன் அட்டை பெறலாம் என்றும், தெருக்களில் வீடின்றி வசிப்பவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கும் உணவு பொருட்கள் கிடைக்க வகை செய்யும் வகையில் அவர்களுக்கும் ரேஷன் கார்டு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.