வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 17 ஏப்ரல் 2023 (08:06 IST)

கடும் வெயில் எதிரொலி: 3 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்..!

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மூன்று மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

ஏப்ரல் மாதம் தொடங்கி விட்டால் நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தும் என்பதும் பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் இருக்கும் என்பதும் தெரிந்ததே. தமிழகத்தில் கூட சுமார் பத்து நகரங்களுக்கு மேலாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் பஞ்சாப் ஹரியானா மற்றும் வடமேற்கு மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக பீகார் ஆந்திரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும் என்று வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva