வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2023 (13:15 IST)

அடுத்த 5 நாட்களுக்கு கடும் வெயில்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த ஐந்து நாட்களுக்கு கடும் வெயில் அடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் பத்துக்கு மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் திகமான வெயில் அடித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை இருக்கும் என்றும் இயல்பை விட அதிகமான வெப்பநிலை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 
 
மேலும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் அடுத்து இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி அதிகமாக இருக்கும் என்றும் சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran