புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 2 மார்ச் 2020 (12:11 IST)

ஈரானிலிருந்து இந்திய மீனவர்கள் மீட்கப்படுவார்களா? – வெளியுறவு மந்திரி பதில்!

ஈரானில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் சூழலில் அங்குள்ள இந்திய மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தென்கொரியா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் கொரோனா வைரஸுக்கு இதுவரை 54 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஈரானிலிருந்து மற்ற நாடுகளுக்கு அனைத்து போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஈரான் அருகே உள்ள தீவுப்பகுதிகளில் மீன்பிடிப்பு பணியில் ஈடுப்பட்டிருக்கும் இந்திய மீனவர்கள் இந்தியா திரும்ப இயலாமல் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்ட நிலையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஈரானில் சிக்கியுள்ள இந்திய மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து ஈரான் அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவு துறை அதிகாரி தாமு கடாம் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.