வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 மே 2022 (14:48 IST)

இலங்கை இந்தியர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்! – வெளியுறவுத்துறை அறிவிப்பு!

Indian Embassy
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்கள் தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கே பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் போராட்டத்தில் குதித்த மக்கள் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கும் தீ வைத்தனர்.

மக்கள் போராட்டத்தால் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகி தலைமறைவான நிலையில், தற்போது ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் தங்கியுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தூதரக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு +94 11 242860 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.