திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 மே 2022 (10:53 IST)

சிதறி ஓடிய ராஜபக்சே! தமிழன் வீரத்திற்கு தலைவணங்கு! - கவிதை பாடிய வைரமுத்து!

vairamuthu
இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ராஜபக்‌ஷே தலைமறைவானது குறித்து வைரமுத்து கவிதை பாடியுள்ளார்.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் தொடங்கி அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்திற்கும் பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது.

அதை தொடர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் நிலையில், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் வன்முறை வெடித்தது. அதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

இதனால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்‌ஷே இலங்கை படைத்தளபதி இல்லத்தில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கவிதை நடையில் பதிவிட்டுள்ள வைரமுத்து “நான்கு பக்கம் மரணம் சூழ்ந்தபோதும் 'தாயகம் பிரியேன் தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே... ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே... ஓ சர்வதேச சமூகமே! இப்போதேனும் தமிழன் வீரத்திற்குத் தலைவணங்கு” என்று பதிவிட்டுள்ளார்.