வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (10:06 IST)

இந்தியாவில் அக்டோபரில் உச்சமடையும் மூன்றாவது அலை!? – பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை அக்டோபரில் உச்சமடையும் என கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டு அலை தாக்கத்தால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் அலை தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ள தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் ஏற்படும் சாத்தியம் குறித்து கூறியுள்ள நிலையில், அக்டோபரில் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை உச்சமடையும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மூன்றாம் அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.