ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (09:55 IST)

நேரடியாக படத்தயாரிப்பில் இறங்கும் ஜெயா டிவி… இயக்குனர் இவர்தான்!

சன் தொலைக்காட்சி இதுபோல சில திரைப்படங்களைத் தயாரித்து தங்கள் சேனலில் நேரடியாக வெளியிட்டது.

கொரோனா பரவலாலும், ஓடிடிகளின் வரவும் சினிமா திரையிடல்களில் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளது. படங்கள் ஓடிடியில் வெளியாவதை அடுத்து சன் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சி போன்றவை நேரடியாக படங்களை வாங்கி வெளியிட ஆரம்பித்தன. சன் தொலைக்காட்சி ஒரு படி மேலே போய் தானே படங்களை தயாரித்து தங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது.

இப்போது அந்த வகையில் ஜெயா டிவியும் இறங்கியுள்ளது. தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி மற்றும் பிரமீட் நடராஜன் ஆகியோர் இணைந்து ஜெயா டிவிக்காக படம் ஒன்றை தயாரிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்க உள்ளாராம்.