1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Indian army make memorial in Galwan

இனி ஒருபோதும் இப்படி நடக்க கூடாது! – கல்வான் வீரர்களுக்கு நினைவு சின்னம்!

India
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீன படைகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட இந்திய வீரர்களுக்கு நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன – இந்திய படைகள் இடையே மோதல் உருவானது. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், இரு நாடுகளிடையே போர் பதற்றமும் உண்டானது. சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன செயலிகளை தடை செய்ததுடன், இந்திய கட்டமைப்பு ஒப்பந்தங்களிலும் சீன நிறுவனங்களை தடை செய்து உத்தரவிட்டது இந்தியா.

இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவிற்காக உயிர்நீத்த வீரர்களுக்காக லடாக் பகுதியில் டர்பக் சியோக் தௌலத் பகுதியில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
உத்தர பிரதேசம் புறப்பட்டார் ராகுல்காந்தி; தமிழக எம்.பிக்களும் உடன் பயணம்!