1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Indian army assassinate 4 terrorists in Kashmir

காஷ்மீரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! – ராணுவம் அதிரடி நடவடிக்கை!

India
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் மேற்கொண்ட சோதனையில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு – காஷ்மீர் யூனியனில் காஷ்மீர் போலீஸார் மற்றும் இந்திய ராணுவம் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அங்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவம் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த மோதலில் இந்திய ராணுவம் 4 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற நிலையில் மேலும் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
மீடியாக்கள்தான் அதிகமான மாசுபாட்டை உருவாக்குகிறது! – உச்சநீதிமன்றம் சாடல்!