1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (17:06 IST)

ATM கார்டு இல்லாமலேயே ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வசதி அறிமுகம்!

ஏடிஎம்களில்  ஏடிஎம் கார்டுகள் இல்லாமலேயே பண எடுக்கும் முறையை எஸ்.பி.ஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
 

உலகம் இணையதள வரவால் மிகவும் எளிதான வழிமுறைகளைக் கையாளத் துவங்கிவிட்டது. இந்நிலையில், வங்கிகளில் காத்திருந்து பணம் எடுத்த முறை போய், ஏடிஎம் மெஷின்களில் பணம் எடுக்கும் முறை வந்தது.

சில ஆண்டுகளிலேயே,  ஆன்லைன் வழியே  பணத்தை வேறு அக்கவுண்டுகளுக்கு எளிதில் டிரான்ஸ்பர் பண்ணும் முறை அறிமுகமானது. இதையடுத்து, பேடிம், போன் பே போன்ற ஆப்கள் இன்னும் மக்களின் சேவையை எளிதாக்கியது.

தற்போது ஏடிஎம்களில்  ஏடிஎம் கார்டுகள் இல்லாமலேயே பண எடுக்கும் முறையை எஸ்.பி.ஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த வழிமுறையை எஸ்.பி,ஐ யோனோ ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.