திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 ஜூலை 2023 (10:26 IST)

இருக்கை மாற்றுவதில் தகராறு! விமான அதிகாரியை அறைந்த பயணி! – நடுவானில் பரபரப்பு!

Flight
டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமான அதிகாரியை அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் பலர் பயணித்துள்ளனர். அப்போது பயணி ஒருவருக்கும், விமானத்தில் பயணித்த மூத்த ஏர் இந்தியா அதிகாரி ஒருவருக்கும் இருக்கை மாற்றிக் கொள்வதில் வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பயணி விமான அதிகாரியை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் விமானத்தில் பரபரப்பு எழுந்துள்ளது. பின்னர் விமானம் டெல்லியை வந்தடைந்ததும் தாக்குதல் நடத்திய பயணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அதற்கு பின் அந்த பயணி மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து மன்னிப்பு கேட்டதால் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K