சனி, 14 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (21:05 IST)

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: இந்தியா - வங்கதேசம் ரயில் சேவை ரத்து!

Train
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே இயங்கி வரும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் இருந்து டாக்காவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 19ஆம் தேதி முதல் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் இயங்கும் என்று இந்திய ரயில்வே அறிவித்திருந்தது.

ஆனால் வங்கதேசத்தில் தற்போது நிலைமை சரியில்லை என்பதால் கொல்கத்தா - டாக்கா இடையிலான ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு ரத்து செய்வதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் இயக்கப்படும் தேதி குறித்து அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்து மாணவர்கள் நடத்திவரும் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா திடீரென நாட்டை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து தற்போது இடைக்கால ஆட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்தில் இயல்புநிலை திரும்பியவுடன் தான் மீண்டும் இந்தியா - வங்கதேசம் இடையிலான ரயில் சேவை தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Edited by Siva