திங்கள், 17 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 மார்ச் 2025 (16:51 IST)

ஜூன் மாத சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்..!

tirupathi
வரும் ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் சுப்ரபாதம் உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட் வழங்கும் தேதி குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, சுப்ரபாதம் உள்ளிட்ட சேவைகளை காண பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
 
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதம் நடைபெறும் சுப்ரபாதம், தோமாலை அர்ச்சனை மற்றும் அஷ்டதல பாத பத்மாராதனை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட் பெற மார்ச் 18ஆம் தேதி காலை 10 மணி முதல் 20ஆம் தேதி காலை 10 மணி வரை ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சேவைகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, போலியான இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.
 
மேற்கண்ட சேவைகளுக்கான டிக்கெட் பெறுவதற்காக மார்ச் 18ஆம் தேதி முதல் பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran