திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (17:19 IST)

ஆசிய கோப்பை: இந்திய அணியை நீக்க வேண்டும்- பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்

India Pakistan
பாகிஸ்தானுக்கு வந்து விளையாடவில்லை எனில் இந்திய அணியை  நீக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதன் முதலாக கடந்த 1984 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய  நாடுகளைக் கொண்ட ஆசிய கிரிக்கெட் போட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் நடப்பது வழக்கம்.

இதுவரை 15 போட்டிகள் நடந்துள்ள நிலையில், இந்தியா 7 முறையும், இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் கோப்பை வென்றுள்ளன.

இந்த ஆண்டு போட்டியை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட முடியாததால்,  இப்போட்டி பொதுவாக ஒரு இடத்திற்கு மாற்றப்படலம் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பிசிசிஐ செயலாளருமான ஜெய்ஷா கூறியிருந்தார்.

எனவே, இம்முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், பாகிஸ்தானின் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க வேண்டும் என்பதில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன், இந்திய அணியை  நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் கவலையில்லை; ஆனால், இப்போட்டியை நடத்த எங்களுக்கு  உரிமையுண்டு. இதைக் கட்டுப்படுத்துவது ஐசிசி. இதை செய்யவில்லை என்றால் அர்த்தமில்லை என்று இந்திய அணி பாகிஸ்தான்   வரவில்லை என்றால்   ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.