வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 8 பிப்ரவரி 2023 (13:24 IST)

இந்தியாவின் நிவாரண பொருட்களின் விமானத்திற்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பா?

Flight
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
 
அந்த வகையில் இந்தியா நிவாரண பொருட்களுடன் கூடிய விமானத்தை துருக்கி நாட்டிற்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துருக்கிக்கு நிவாரண பொருட்களை ஏற்றி சென்ற இந்திய விமானப்படை விமானங்களை தங்கள் வான் இல்லையில் பறக்க பாகிஸ்தான் அனுமதி மறுத்து விட்டதாக தகவல் சமூக வலைதளங்களில் பரவியது
 
ஆனால் இந்த தகவலை இந்திய விமானப்படை மறுத்துள்ளது. இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் வழியாக செல்லவில்லை என்றும் குஜராத் மேற்கு ஆசியா, ஐரோப்பிய வழியாகத்தான் துருக்கி சென்றது என்றும் பாகிஸ்தான் விண்வெளியை இந்திய விமானப்படை பயன்படுத்தவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Mahendran