1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. india import lpg gas froma merica

போர் எதிரொலி!.. அமெரிக்காவிடமிருந்து LPG கேஸ் இறக்குமதி செய்யும் இந்தியா!..

gas
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது என சொல்லி இந்த போர் நடந்து வருகிறது. ஒருபக்கம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு உதவி செய்யும் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், துபாய், அபுதாபி, பக்ரைன் போன்ற நாடுகளில் உள்ள நாடுகளின் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது..

சமீபத்தில் கத்தாரின் ராஸ் லாபன் (Ras Laffan) தொழில்நகரம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் இந்தியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. 14 வருடம் கடின உழைப்பால் கட்டி எழுப்பப்பட்ட Gas to Liquid மற்றும் எல்.என்.ஜி (LNG) ஆலைகள் இயங்குகிறது. ஈரானின் தாக்குதலால் இதை சரி செய்யவே பல வருடங்கள் ஆகும் என்கிறார்கள்..

குறிப்பாக இந்தியாவின் திர இயக்க எரிவாயு எரிவாயு எல்.என்.ஜி தேவையில் 40 சதவீதத்தை கத்தார் மட்டுமே பூர்த்தி செய்கிறது. பெட்ரோநெட் எல்.என்.ஜியுடன் இந்தியா பல வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால், ஈரான் தாக்குதலால் தற்போது எரிபொருள் கிடைக்கவில்லை. எனவே, இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இந்தியாவுக்கு கிடைக்கும் LPG எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் தற்போது கேஸ் சிலிண்டர் விலை இரண்டு மடங்காக இருக்கிறது.

இந்நிலையில்தான் மத்திய கிழக்குப் போர் எதிரொலியால் அமெரிக்காவிலிருந்து கூடுதல் LPG இறக்குமதி செய்ய தொடங்கியிருக்கிறது. இந்தியா. அமெரிக்காவின் டெக்சாஸ் நகரிலிருந்து LPG ஏற்றி வந்த PYXIS PIONEER சரக்கு கப்பல் மங்களூர் துறைமுகத்தை வந்தடைந்தது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஈரான் தாக்கியதில் அமெரிக்காவுக்கு ரூ.6,700 கோடி நஷ்டம்.. இன்னும் அதிகமாகுமா?