1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (07:41 IST)

தக்க நேரத்தில் உதவி செய்த இந்தியாவுக்கு நன்றி: மாலத்தீவு அமைச்சர்

தக்க நேரத்தில் உதவி செய்த இந்தியாவுக்கு நன்றி என மாலத்தீவு அமைச்சர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக சீனாவின் ஆதரவாளரான மாலத்தீவு அதிபர் முகமது முயசு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றும் கூறப்பட்டது.
 
இந்நிலையில் மாலத்தீவுக்கு கோதுமை, அரிசி, சர்க்கரை, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது. மாலத்தீவில் அத்தியாவசிய பொருட்களுக்கான தேவை அதிகரித்த நிலையில் இந்தியா சரியான நேரத்தில் உதவி கரம் நீட்டி ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்ததற்கு நன்றி என மாலத்தீவு அமைச்சர் ஜமீர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

குறிப்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அரசுக்கு நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் இது உண்மையிலேயே ஒரு நல்ல உதவி என்றும் நீண்ட கால நட்பை இந்தியாவுடன் விரிவுபடுத்த மாலத்தீவு தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ஜெய்சங்கர் வெல்கம் ஜமீர், இந்தியாவை பொருத்தவரை அண்டை நாடுகளுக்கு தான் முன்னுரிமை தருவோம், அதில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்

Edited by Siva