செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (13:33 IST)

பத்திரிக்கை சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 140வது இடம்! – அதிர்ச்சி ரிப்போர்ட்!

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பத்திரிக்கை சுதந்திரம் பற்றிய ஆய்வில் இந்தியா 140வது இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலக நாடுகளில் பத்திரிக்கை சுதந்திரம் பேணப்படும் நாடுகள் குறித்த ஆய்வில் இந்தியா 140வது இடத்தில் உள்ள நிலையில் இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கண்காணிப்பு பிரிவு சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் மூத்த பத்திரிக்கையாளர் சாய்நாத் உட்பட பலர் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் பேசிய சாய்நாத் “பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கிய புள்ளியே கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரம்தான். சமக்காலத்தில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து எழுதும் பத்திரிக்கையாளர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் இணைய வசதி துண்டித்தல், பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுத்தல் உள்ளிட்ட தடைகள் நீக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.