ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (10:16 IST)

தாஜ்மஹால் இருந்த இடத்தில் சிவன் கோவிலா? – சர்ச்சையை கிளப்பிட பாஜக எம்.எல்.ஏ!

தேசிய சுற்றுலா தளமாகவும், புராதான சின்னமாகவும் விளங்கும் தாஜ்மஹால் உள்ள இடத்தில் சிவன் கோவில் இருந்ததாக பாஜக எம்.எல்.ஏ பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முகலாய ஆட்சி காலத்தில் ஷாஜகானால் கட்டப்பட்டது. காதல் சின்னமாக உலகம் முழுவதும் கருதப்படும் தாஜ்மஹாலை சுற்றி பார்க்க ஏராளமான வெளிநாட்டு பயணிகல் வருகை புரிகின்றனர், மட்டுமல்லாது புராதான சின்னமாகவும் இது உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தாஜ்மஹால் பற்றி பேசியுள்ள உத்தர பிரதேச பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் “தாஜ்மஹால் என்ற பெயர் விரைவில் ராம் மஹால் என பெயர் மாற்றப்படும். தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்னர் சிவன் கோவில் இருந்தது” என பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.