6 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: மகாராஷ்டிராவில் உச்சம்!

coronavirus
Prasanth Karthick| Last Modified வியாழன், 9 ஏப்ரல் 2020 (08:59 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,734 ஆக உள்ளது. மகாராஷ்டிராவில் 1138 பேரும், தமிழகத்தில் 738 பேரும், டெல்லியில் 669 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 149லிருந்து 166 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 411 லிருந்து 473 ஆக அதிகரித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :