1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (08:15 IST)

அல்லு அர்ஜுன் ரசிகர்களிடம் சிக்கிய நெட்பிளிக்ஸ்! அப்படி என்ன சொன்னார்கள்?

நெட்பிளிக்ஸ் அல்லு அர்ஜுனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்போக அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் நேற்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவர் நடித்துள்ள புஷ்பா எனும் 5 மொழிகளில் உருவாகும் படத்தின் முதல் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நெட்பிளிக்ஸ் அவரது ரசிகர்களிடம் கண்டனங்களைப் பெற்றுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா பிரிவின் ட்விட்டர் பக்கத்தில் ‘இந்த அழகான புட்டா பொம்மாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்’ எனக் கூறியிருந்தது. புட்ட பொம்மா என்பது அல்லு அர்ஜுன் நடித்து சமீபத்தில் வெளியானப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடலின் வரியாகும். ஆனால் புட்ட பொம்மா என்றால் அழகான பெண் என்று அர்த்தமாகும்.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் எப்படி இப்படி அவரை இழிவு செய்யலாம் என்று நெட்பிளிக்ஸூக்கு எதிராகப் பொங்கி எழ உடனே அவர்கள் அந்த பதிவை நீக்கிவிட்டனர்.