கொரோனாவை விட கொடூரமானது பட்டினிசாவு! – மு.க.ஸ்டாலின் அறிக்கை!

Prasanth Karthick| Last Modified வியாழன், 9 ஏப்ரல் 2020 (08:18 IST)
நாடு முழுவதும் கொரோனா பரவியிருக்கும் சூழலில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று பேசிக்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை விடுத்துள்ள மு.க.ஸ்டாலின் கொரோனா வைரஸிலிருந்து மக்களை காக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் அதே சமயம் மக்களின் உணவு பற்றாக்குறை பிரச்சினைகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பதால் மக்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், கொரோனாவை விட கொடூரமானது பட்டினிசாவு, மக்களை பட்டினிசாவிலிருந்து காக்க அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :