திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 12 ஏப்ரல் 2021 (11:43 IST)

ரெம்டிசிவர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை!

ரெம்டிசிவர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.  

 
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக இப்போது பரவிவருகிறது. இந்நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதத்துக்கு இந்த இரண்டு தடுப்பூசிகளும் இல்லாமல் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது. 
 
இந்நிலையில், இந்த தடுப்பூசிகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் மேலும் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. எனவே, இந்தியாவில் தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் தடுப்பூசிகளின் தேவை கருதி ரெம்டிசிவர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.