1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India baned PUBG and 118 apps

பப்ஜிக்கு தடை விதித்தது இந்திய அரசு! – அதிர்ச்சியில் கேமர்ஸ்!

India
இந்தியாவில் முன்னதாக பல சீன செயலிகள் தடைசெய்யப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

சீனா – இந்தியா இடையேயான எல்லை மோதலை தொடர்ந்து இந்தியாவில் ஹலோ, டிக்டாக் உள்ளிட்ட பல சீன அப்ளிகேசன்கள் தடை செய்யப்பட்டன. அதை தொடர்ந்து இந்திய இளைஞர்களை சீரழிக்கும் பப்ஜி உள்ளிட்ட கேம்களை தடை செய்ய வேண்டும் எனவும், அதன் பெரும்பான்மை பங்குதாரர்களாக சீனா உள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் தற்போது சீனா மீண்டும் இந்திய எல்லையில் அத்துமீறிய நிலையில் இரண்டாவது முறையாக சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகள் இடம்பெற்றுள்ளன. பப்ஜி தடை செய்யப்பட்டுள்ளது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ள நிலையில், பப்ஜி ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
கோயம்பேடு மார்க்கெட்டை மட்டும் திறக்குறீங்க? – போராட்டம் நடத்திய காந்தி மார்க்கெட் வியாபாரிகள்!