1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (14:16 IST)

அமெரிக்க - இந்திய உறவு புதிய வரலாறு படைக்கும் - பிரதமர் மோடி

அமெரிக்க - இந்திய உறவு புதிய வரலாறு படைக்கும் - பிரதமர் மோடி

நேற்று  (24 ஆம் தேதி)  குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு தனது குடும்பத்தினருடன் விமானத்தில் வந்திறங்கிய அதிபர் டிரம்ப், அங்குள்ள பட்டேல் மைதானத்தில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 
 
அதன்பிறகு,   உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா நதிக்கரையில் உள்ள தாஜ்மஹாலைப் பார்க்க டிரம்ப் தனது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னருடன் யனுமை நதிக்கரையில் உள்ள தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தார். அப்போது, டிரம்ப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி விளக்கினார்.
 
இன்று, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
அதன் பிறகு, பிரதமர் மோடி பேசியதாவது, அமெரிக்கா இந்தியா இடையிலான இருதரப்பு உறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வது பற்றி ஆலோசனை செய்தோம்.
 
கடந்த ஆறு மாதங்களில் நானும் அமெரிக்க அதிபரும் 6 முறை நேரில் சந்தித்து பேசியுள்ளோம்.
 
எரிசக்தி துறையிலும் இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.  சுகாதாரம் மருத்துவ ஒத்துழைப்பு, தகவல் தொடர்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது என தெரிவித்துள்ளார்.
 
அதன்பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதாவது :
 
ஒப்பந்தம் மூலம் பாதுகாப்பு துறையில் இந்தியா அமெரிக்காவின் ராணுவ திறன் வலுமைப்படும். அமெரிக்காவின் அப்பாச்சி, ரோமியோ ஹெலிகாப்டர்கள் ராணுவ ஆயுதங்களை இந்தியாவுக்கு தர் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  இந்தியா அமெரிக்கா இடையெ பாதுகாப்புத் துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இந்தியா - அமெரிக்கா உறவு இதுவரை இல்லாத அளவுக்கு மேலும் வலுப்பெற்றுள்ளது என தெரிவித்தார்.