செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 22 பிப்ரவரி 2021 (16:16 IST)

சுயேட்சை எம்.பி.ஒருவர் சடலமாகக் கண்டெடுப்பு !!! அதிர்ச்சி சம்பவம்

சுயேட்சை எம்.பி.ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

கடந்த 2020 ஆம் ஆண்டில்தான் கொரோனா தொற்று மற்றும் பல பிரபலங்களின் உயிரிழப்பு என ஒட்டுமொத்த உலகமும் பெரும் பதற்றத்துடன் இருந்தது.

இந்தவருடம் எல்லோருக்கும் நன்றாக இருக்குமென்று நினைத்த நிலையில் அதேபோல் சில சம்பவங்கள் நடந்த வண்ணம் இருப்பது மக்களைப் பதற்றமடையச் செய்துள்ளது.

சுயேட்சை எம்.பி.ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் மக்களவை சுயேட்சை எம்.பி மோகன் தேல்கார் என்பவர் மும்பையில் உள்ள ஒரு  பிரபல ஹோட்டலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல்கள்  வெளியாகிறது.  இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சுயேட்சை எம்.பி மோகன் தேல்கார் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து  தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.