வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் ?
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சில மாதங்களாகத் தங்கியிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணை சாமியார் ஒருவர் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிரிவலப் பாதையில் 34 வயதுடைய இளைஞர் வசித்து வந்தார். இவர் சாமியார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ஒரு பகுதியில் தங்கியிருந்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இளம் பெணை அவர் பார்த்துள்ளார்.
எனவே அந்தப் பெண் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை அறிந்து, அவரை வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது அப்பெண் கூச்சலிட்டுள்ளார். அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்து திருவண்ணாமலையில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.