செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (16:52 IST)

ரஜினியுடன் ஒரே மேடையில் விருது வாங்கியது மகிழ்ச்சி – தனுஷ் நெகிழ்ச்சி!

இன்று திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் நடிகர் தனுஷ் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டுக்கான திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் இன்று வழங்கப்பட்டன. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்க்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அதேபோல நடிகர் தனுஷ் அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காகவும், விஜய் சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் படத்திற்காகவும் விருதுகள் வழங்கப்பட்டது.

தேசிய விருது பெற்றது குறித்து பேசிய நடிகர் தனுஷ் “சிறுவயதில் இருந்து நான் பார்த்து ரசித்து வியந்தவர் ரஜினிகாந்த். அவர் தாதா சாகேப் விருது வாங்கிய அதே மேடையில் நானும் தேசிய விருது பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.