திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (17:33 IST)

எல்லா புகழும் என் ரசிகர்களுக்கே..! – விருதை சமர்பித்த தனுஷ்!

இன்று சிறந்த சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற நடிகர் தனுஷ் அதை தனது ரசிகர்களுக்கு சமர்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டுக்கான திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் இன்று வழங்கப்பட்டன. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்க்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அதேபோல நடிகர் தனுஷ் அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காகவும், விஜய் சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் படத்திற்காகவும் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் விருது பெற்ற நடிகர் தனுஷ் தனது ட்விட்டரில் “ரசிகர்களுக்காக” எனக் குறிப்பிட்டு தனது விருதின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது விருதை மறைந்த இயக்குனர் பாலசந்தர் உள்ளிட்டோருக்கு சமர்பணம் செய்த நிலையில் நடிகர் தனுஷ் தனது விருதை ரசிகர்களுக்கு சமர்பணம் செய்துள்ளார்.