ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (11:36 IST)

சிறையில் இருக்கும் தர்ஷன் வீடியோ விவகாரம் : 7 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்

Actor dharshan
நடிகர் தர்ஷன் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் 7 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகர் தர்ஷன் கையில் சிகரெட் மற்றும் டீ கோப்பை உடன் இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. கொலை வழக்கில் சிக்கி அவர் தற்போது சிறையில் இருக்கும் நிலையில் அவர் அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதை அடுத்து கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரேணுகா சாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் தற்போது கன்னட நடிகர் தர்ஷன் சிறையில் இருக்கும் நிலையில் அவர் சிறையில் கையில் சிகரெட் டீ கோப்பையுடன் இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விசாரணை செய்த சிறைத்துறை பரப்பன அக்ரஹாரம் சிறையின் ஜெயிலர் உள்பட 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே சசிகலா இருந்த போதும் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது என்பதும் இது குறித்து விசாரணையும் நடந்தது என்பது தெரிந்தது.

இப்போது அதே சிறையில் நடிகர் தர்ஷனும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதை பார்க்கும் போது பணம் இருந்தால்  குற்றவாளிகள்  சிறையிலும் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran