வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 20 செப்டம்பர் 2018 (13:54 IST)

விடுதி வார்டனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சிறுவர்கள்

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் இருந்து 325கி.மீ தொலைவில் உள்ள புர்னியே கிராமத்தில் கூர்நோக்கு இல்லம் உள்ளது.

அங்கு பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த கூர்நோக்கு இல்லத்திற்கு பிஜேந்திர குமார் என்பவர் வார்டனாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் வார்டன் பிஜேந்திர குமார் சிறுவர்கள் தங்கியிருந்த அறைகளில் சோதனை நடத்தினார். அப்போது இருமலுக்கு பயன்படுத்தப்படும் மருந்து பாட்டில்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அந்த அறையில் இருந்த சிறுவர்களிடம் விசாரணை நடத்திய போது சிறுவர்கள் அம்மருந்தை போதைப் பொருளாக பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறார்களுக்கான நீதி அமைப்பில் முறையீடு செய்த பிஜேந்திரகுமார் .இந்த குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து சிறுவர்களையும் வேறு இல்லத்திற்கு மாற்ற அனுமதி வாங்கியுள்ளார்.

இதனை தெரிந்து கொண்ட ஐந்து  சிறுவர்களும் கோபத்தில் வார்டனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த கொலை தொடர்பாக பீஹார் மாநில போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வார்டன் கொலை வழக்கில் போலீஸாரால்  தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் ஐந்து பேரில் ஒருவன் கட்சி பிரமுகர் ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.