வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 19 செப்டம்பர் 2018 (19:56 IST)

மத்திய பிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணின் முகத்தில் திராவகம் வீசிய கொடூர காதலன்

ரூபாளி நிராபுரே என்ற இளம் பெண்(21) இந்தூரில் உள்ள நாட்டுப்புற குழுவில் உறுப்பினராக இருந்து பல்வேறு நடன நிகழ்சிகளில் பங்கேற்று வந்துள்ளார்.

இவர் நடன நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு ஊர்களுக்கும் வெளியூர்களுக்கு செல்வதை இவரது காதலர் விரும்பவில்லை.இதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதை அலட்சியம் செய்வதுபோல் ரூபாளி நடன நிகழ்ச்சிகளுக்காக தொடர்ந்து வெளியூர்களுக்கு செல்வதும்,மற்ற ஆண்களுடன் நட்பு கொண்டு பேசியும் வந்திருக்கிறார்.

இதனால் கோபமடைந்த மோனு,காதலியை பங்கங்கா பகுதிக்கு வரச்சொல்லி இருக்கிறார். வழக்கம் போல பேசுவதற்குதான் வரச் சொன்னதாக நினைத்துக் கொண்டு சென்ற இளம் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து அவன் தப்பிச் சென்றுள்ளான். இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இளம்பெண் அருகே இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முகத்தில் தீக்காயம் எதுவும் இல்லை.ஆனால் அவரது கண்பார்வைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது கிடைத்த தகவலின் அடிப்படையில்,மோனு இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார்.

மேலும் காதலி வெளியூர் சென்று நடன நிகழ்ச்சியில் பங்கேற்பதும், ஆண் நண்பர்களை சந்தித்து பேசி வந்ததும் மோனுவுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியதால் இவ்வாறு அவன் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.